உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றான 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் சுற்றில் ‘பை’ பெற்றிருந்த சிந்து, நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் 11-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் லின் கேயர்ஸ்பெல்ட்டை தோற்கடித்தார்.
2013, 2014 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவரான சிந்து, அடுத்த சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனும், முன்னாள் முதல் நிலை வீராங்கனையுமான சீனாவின் லீ ஸியூரூயை சந்திக்கிறார்.
சர்வதேச தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் காந்த் தனது முதல் சுற்றில் 21-10, 21-13 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஃபரிமானை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அடுத்ததாக சீன தைபேவின் சூ ஜென் ஹாவை சந்திக்கிறார் காந்த்.
மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 9-21, 7-21 என்ற செட் கணக்கில் சீனாவின் யூன்-லூ காய் ஜோடியிடம் தோல்வி கண்டது.