விளையாட்டு

தோனி எப்போது ஓய்வு பெற்றாலும் அது நமக்கு பெரிய இழப்புதான்: கபில் தேவ்

செய்திப்பிரிவு

1983 உலகக்கோப்பை வென்ற இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் சென்னையில் ‘83’ திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளார். இந்தியா 1983-ல் கபில் தலைமையில் முதன் முதலாக உலகக்கோப்பையை வென்றது பற்றிய படம்தான் இது.

இதற்கிடையே கபில் தேவ் கூறும்போது, “தோனி நாட்டுக்காக பல ஆண்டுகள் ஆடி சேவையாற்றியுள்ளார். ஒருநாள் அவர் ஓய்வு பெற்றுத்தான் ஆகவேண்டும். அது விரைவில் நிகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏதோ ஒரு கட்டத்தில் அவர் போக வேண்டியிருக்கும். அவர் போட்டிகளில் ஆடுவதில்லை, ஆகவே அவர் எப்போது வந்து ‘போதும் ஓய்வு பெறுகிறேன்’ என்று கூறப் போகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடியும், அவர் எப்போது ஓய்வு பெற்றாலும் அது நமக்கு இழப்புதான்” என்றார் கபில்தேவ்.

அதே போல் ரிஷப் பந்த் குறித்த கேள்விக்கு, “தன்னை அணியிலிருந்து நீக்கும் வாய்ப்பையோ, ஓய்வு அளிக்கப்படும் வாய்ப்பையோ வீரர்கள் அளிக்கக் கூடாது. பந்த் யாரையும் குறை கூறக்கூடாது, அவர்தான் தன் கரியரை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

ஒரே வழி ரன்களை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும், இதன் மூலம்தான் அனைவரையும் தவறு என்று அவர் நிரூபிக்க முடியும். திறமை இருக்கும் போது அவர்தான் நிரூபிக்க வேண்டும்.” என்றார் கபில் தேவ்.

SCROLL FOR NEXT