அகமாதாபாத் மொடீராவில் உலகிலேயே மிகப்பெரிய ஸ்டேடியமாக உருவாகி வரும் சர்தார் படேல் ஸ்டேடியம் இன்னும் 2 மாதங்களில் போட்டிகளுக்குத் திறக்கப்படும் என்று தெரிகிறது.
ஐசிசி தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் இந்த ஸ்டேடியத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இங்கு உள்நாட்டு, சர்வதேச போட்டிகள் நடைபெறுவதோடு உள்ளரங்க கிரிக்கெட் அகாடமி ஒன்றும் செயல்படவிருக்கிறது.
இந்த ஸ்டேடியத்தில் 110,000 பேர் அமர்ந்து போட்டிகளை ரசிக்கலாம், மிகப்பெரிய ஸ்டேடியமாகும் இது.
ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கு இடையிலான காட்சிப் போட்டி ஒன்று மார்ச்சில் இங்கு நடைபெரும் முதல் போட்டியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சுக்கென பவுன்ஸ் பிட்ச், ஸ்பின் பிட்ச், இரண்டும் கலந்த ஒரு பிட்ச் என்று 3 பிட்ச்களுடன் தயாராகிறது. மொத்தம் 11 பிட்ச்களுடன் இந்த மைதானம் போட்டிகளுக்குத் தயாராகி வருகிறது.
மேலும் மழை பெய்தால் 30 நிமிடங்களில் நீர் வடியும் விதமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மழையினால் ஆட்டம் கைவிடப்படும் சூழல் மிகக்குறைவு என்கின்றனர் மைதான அதிகாரிகள்.