4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் ரவி பிஸ்னோய் : படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

யு-19 உலகக்கோப்பை: ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய அணி; உதிரிகள்தான் அதிகம், 5 பேட்ஸ்மேன்கள் டக்அவுட்

பிடிஐ

தென் ஆப்பிரிக்காவின் புளோம்பென்டீன் நகரில் நடந்துவரும் வயதுக்குப்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் ஜப்பான் அணியை 10விக்கெட் வித்தியாசத்தில் ஊதித் தள்ளி வெற்றி பெற்றது இந்திய அணி.

முதலில் பேட் செய்த ஜப்பான் அணி 22.5 ஓவர்களில் 41 ஓவர்களுக்கு ஆட்டமிழந்தது. 42 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

நடப்பு சாம்பியன் எனும் பெயருடன் வலிமையான அணியாகக் களத்தில் இந்திய அணி இருக்கையில், அறிமுக அணியான ஜப்பான் இந்திய வீரர்கள் கசக்கிச் சுருட்டி எறிந்தனர். ஜப்பான் அணியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் இரட்டை இலக்க ரன்னைத் தொடவில்லை. அந்த அணிக்காக இந்திய அணி வழங்கிய உதிரிகள்(எக்ஸ்ட்ராஸ்)தான் அதிகபட்சமாக 19 இருந்தது.

மற்ற வகையில் ஜப்பான் அணியின் 5 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டில் ஆட்டமிழந்தனர், 3 வீரர்கள் தலா ஒரு ரன் சேர்த்து வெளியேறினர், அதிகபட்சமாக இரு பேட்ஸ்மேன்கள் தலா 7 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் ரவி பிஸ்னோய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆகாஷ் சிங் 2 விக்கெட்டுகளையும், தியாகி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

நடப்பு சாம்பியனான இந்திய அணியின் பந்துவீச்சு, பேட்டிங் முன் கத்துக்குட்டி ஜப்பான் அணியால் சமாளிக்க முடியவில்லை.
42 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், ஜெய்ஷ்வால் 29 ரன்கள் சேர்த்தும், குஷ்ஹாரா 13 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். ஆட்டநாயகன் விருது சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஸ்னோயாக்கு வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT