விளையாட்டு

ஜடேஜா அடித்த சிக்ஸ்: தோனி பாராட்டு

செய்திப்பிரிவு

ராஞ்சியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை வீழ்த்தியதற்கு ஜடேஜா, கெவின் கூப்பர் பந்தில் அடித்த சிக்ஸ் ஒரு முக்கியக் காரணியாக அமைந்தது என்று கேப்டன் தோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதேபோல் அஸ்வினை தனக்கு முன்னால் பேட்டிங்கிற்கு அனுப்பிய முடிவும் சரியானதே என்று தோனி கூறினார்.

"அஸ்வினுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கவே முன்னால் அனுப்பினோம். ஓரளவுக்கு அதில் வெற்றியும் கண்டோம். இதுபோன்று வாய்ப்புகள் கொடுத்த பிறகே ஒரு வீரரிடம் நாம் எதிர்பார்க்கவேண்டும். திடீரென அவரை இறக்கி அவர் ஆடவில்லை என்று கூறக்கூடாது.

அஸ்வினிடம் பேட்டிங் திறமைகள் உள்ளது. அவர் சிங்கிள்களையும் எடுப்பார், ஸ்பின்னர்களை அடித்தும் ஆடுவார்.

ஜடேஜா கெவின் கூப்பர் பந்தில் அடித்த சிக்ஸர் உண்மையில் எனது அழுத்தத்தைக் குறைத்தது. இந்த வகைப் பிட்ச்களில் ஓவருக்கு 10 அல்லது 12 ரன்களுக்கு மேல் அடிக்க முடியாது."

இவ்வாறு கூறினார் தோனி.

SCROLL FOR NEXT