பிரஜ்னேஷ் குணேஷ்வரன் 
விளையாட்டு

ஆஸ். ஓபன் பிரதான சுற்றை நெருங்குகிறார் குணேஷ்வரன்: சுமித் நாகல் வெளியேற்றம்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஷ்வரன் 2-வது சுற்றில் வெற்றி பெற்றார். அதேவேளையில் சுமித் நாகல் தனது முதல் ஆட்டத்திலேயே தோல்வி கண்டு வெளியேறினார்.

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் வரும் 20-ம் தேதி மெல்பர்ன் நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கடந்த சில நாட்களாக மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் தனது முதல் எகிப்தின் முகமது சபாத்தை எதிர்த்து விளையாடினார்.

இதில் சுமித் நாகல் 6-7, 2-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். அதேவேளையில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஷ்வரன் தனது 2-வது ஆட்டத்தில் 1-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் யானிக் ஹான்ஃப்மேனை வீழ்த்தினார். இன்று நடைபெறும் ஆட்டத்தில் லத்வியாவின் ஏர்னெஸ்ட் குல்பிஸுடன் மோதுகிறார் பிரஜ்னேஷ் குணேஷ்வரன். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் 20-ம் தேதி தொடங்கும் பிரதான சுற்றில் கால்பதிப்பார் பிரஜ்னேஷ் குணேஷ்வரன்.

SCROLL FOR NEXT