நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள ஹாக்கி தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஹாக்கி போட்டி வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக ராணி ராம்பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதல் போட்டி ஜனவரி 25-ம் தேதியும், 2-வது போட்டி 27-ம் தேதியும், 3-வது போட்டி 29-ம் தேதியும் நடைபெறும். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 4-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, பிரிட்டனுடன் மோதும், பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் கடைசி ஆட்டத்தில் மீண்டும் நியூஸிலாந்துடன் இந்திய மகளிர் அணி விளையாடவுள்ளது.
அணி விவரம்: ராணி ராம்பால் (கேப்டன்), சவிதா (துணை கேப்டன்), ரஜினி எட்டிமார்ப்பு, டீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், ரீனா கோக்கர், சலிமா டெட்டே, சுசீலா சானு, நிஷா, நமிதா டாப்போ, உதித்தா, மோனிகா, லிலிமா மின்ஸ், நேஹா, சோனிக்கா, ஷர்மிளா தேவி, நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, வந்தனா கட்டாரியா, நவ்ஜோத் கவுர்.- பிடிஐ