விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. 6 வார கால பயணத்தில் 5 டி 20ஆட்டங்கள், 3 ஒருநாள் போட்டி,2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தபயணத்துக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
முகுது வலி காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மீண்டும் திரும்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் போட்டிக்கான அணியில் கேதார்ஜாதவ் தனது இடத்தைபறிகொடுக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
மாறாக அஜிங்க்ய ரஹானே அல்லது டி 20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்படலாம். டெஸ்ட் போட்டிக்கான அணியில் 3-வது தொடக்க வீரராக மீண்டும் கே.எல்.ராகுல் அழைக்கப்படலாம். ஏனெனில் குறுகிய வடிவிலான போட்டிகளில் ராகுல் சிறந்த பார்மில் உள்ளார்.
பந்து வீச்சு துறையை பொறுத்தவரையில் 3-வது சுழற்பந்து வீச்சாளர் தேவை என தேர்வுக் குழுவினர் கருதினால் குல்தீப் யாதவ் இடம் பெறுவார். இல்லையென்றால் பும்ரா, உமேஷ் யாதவ், ஷமி,இஷாந்த் சர்மா ஆகியோருடன் 5-வது பந்து வேகப்பந்து வீச்சாளராக நவ்தீப் சைனி இடம் பெறக்கூடும்.