விளையாட்டு

கேப்டனாக கோலியின் அசுர சாதனை: பாண்டிங், ஸ்மித் ரெக்கார்ட் உடைந்தது

செய்திப்பிரிவு

கேப்டனாக சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ரன்களை அதிவேகமாக எடுத்து ரிக்கி பாண்டிங், கிரேம் ஸ்மித் ஆகியோர் சாதனைகளை உடைத்தார் இந்திய கேப்டன் விராட் கோலி.

11,000 சர்வதேச ரன்களை கேப்டனாக கோலி 196 இன்னிங்ஸ்களில் எடுக்க, ரிக்கி பாண்டிங் கேப்டனாக 252 இன்னிங்ஸ்களையும், தென் ஆப்ரிக்க கேப்டனாக கிரேம் ஸ்மித் 264 இன்னிங்ஸ்களையும் 11,000 ரன்களை எட்ட எடுத்துக் கொண்டனர்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஆலன் பார்டர் 316 இன்னிங்ஸ்களில்தான் இந்த மைல்கல்லை எட்டினார். இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 324 இன்னிங்ஸ்களில்தான் 11,000 ரன்கள் மைல்கல்லை கேப்டனாக எட்ட முடிந்தது.

இன்று புனேயில் இலங்கைக்கு எதிராக சாம்சன், பாண்டே, அய்யர் ஆகியோருக்கு வழிவிட்டு தோனி போல் 6ம் நிலையில் இறங்கி 17 பந்துகளில் 26 ரன்களை எடுத்து ரன் அவுட் ஆனார்.

இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 201/6 என்ற ஸ்கோரை எட்டியது.

SCROLL FOR NEXT