விளையாட்டு

சஞ்சு சாம்சனின் விரும்பத் தகாத சாதனைக்குக் காரணமான இந்திய அணி நிர்வாகம்

செய்திப்பிரிவு

ஏகப்பட்ட பெஞ்ச்களைப் பார்த்த பிறகு ஒருவழியாக சஞ்சு சாம்சன் புனே டி20 போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் படுதடவலாக இருப்பதால் இந்த வாய்ப்பை சஞ்சு சாம்சனுக்கு ஒருவழியாக வழங்கியுள்ளனர் இந்திய அணி நிர்வாகம், சாம்சனைத் தேர்வு செய்தடு ட்விட்டரில் அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் அதே வேளையில் விரும்பத்தகாத சாதனை ஒன்றிற்கும் உரியவரானார் சஞ்சு சாம்சன்.

இது ட்விட்டர்வாசிகளிடையே நல்லபடியாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சஞ்சு சாம்சன் காரணமாகாத அவர் விரும்பத்தகாத சாதனை இதுதான்: 2015-ல் இந்திய அணிக்காக டி20 போட்டியில் அறிமுகமானார். அதன் பிறகு இந்த வடிவத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2வது சர்வதேச போட்டியில் ஆடுகிறார்!

அவரது முதல் 2 ஆட்டங்களுக்கு இடையே 73 டி20 சர்வதேசப் போட்டிகளை அவர் இழந்துள்ளார். இந்தியாவிலேயே இவர்தான் முதல் 2 போட்டிகளுக்கு இடையே இவ்வளவு இடைவெளி கொண்ட வீரராக இருக்கிறார், உமேஷ் யாதவ்வின் 2 போட்டிகளுக்கு இடையே 65 டி20 போட்டிகள் நடந்தன.

எனவே இந்த வகையில் ஆடாமலேயே உமேஷ் யாதவ் சாதனையை முறியடித்து விட்டார் சஞ்சு சாம்சன், இதற்கான பெருமை இந்திய அணித் தேர்வுக்குழுவையும் இந்திய அணி நிர்வாகத்தையும் கேப்டன் விராட் கோலியையுமே சாரும்.

இங்கிலாந்தில் ஜோ டென்லி 79 டி20 போட்டிகளை தன்னுடைய முதல் 2 டி20 போட்டிகளுக்கிடையே மிஸ் செய்துள்ளார், இவருக்கு அடுத்த படியாக லியாம் பிளங்கெட், இவர் 74.

தற்போது 3வது இடம் பிடிக்க சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணி நிர்வாகம் உதவியுள்ளது, என்னே உதவி!! இப்படி திடீரென எடுப்பார்கள், இதனால் அவர் 6 ரன்களில் இன்று ஆட்டமிழந்தார். அடுத்த போட்டிக்கு இருக்க மாட்டார், 3வது போட்டியில் ஆட இன்னும் எத்தனை ஆண்டுகள் அவர் காத்திருக்க வேண்டுமோ பாவம்.

SCROLL FOR NEXT