ஏடிபி கோப்பை டென்னிஸ் தொட ரில் பெல்ஜியம், கனடா, நார்வே அணிகள் தங்களது முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
24 நாடுகள் கலந்து கொண் டுள்ள ஏடிபி கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. இதில் சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என்ற கணக்கில் மால்டோவாவை வீழ்த்தியது. ஒற்றையர் பிரிவில் ஸ்டீவ் டார்சிஸ் 6-4, 6-7 (4-7), 7-5 என்ற செட் கணக் கில் அலெக்சாண்டர் கோஸ்பினோ வையும், டேவிட் கோபின் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் ராடு அல்போட்டையும் வீழ்த்தினர். இரட்டையர் பிரிவில் சான்டர் கில், ஜோரன் விலிகென் ஜோடி 6-7 (5-7), 7-6 (7-4), 11-9 என்ற செட் கணக்கில் ராடு அல்போட், அலெக்சாண்டர் கோஸ்பினோ ஜோடியை தோற்கடித்தது.
கனடா அசத்தல்
பிரிஸ்பனில் நடைபெற்ற ஆட்டத்தில் கனடா 3-0 என்ற கணக்கில் கிரீஸை பந்தாடியது. பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் மைக்கேல் பெர்வோலராகிஸையும், டெனிஸ் ஷாபோலோவ் 7-6 (8-6), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸையும் தோற்கடித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் பிரிவில் டெனிஸ் ஷாபோலோவ், பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்டில் மிக எளிதாக சிட்சிபாஸ், மைக்கேல் பெர்வோலராகிஸ் ஜோடியை வென்றது.
மீண்டெழுந்த நார்வே
பெர்த் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் நார்வே 2-1 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. ஒற்றையர் பிரிவில் முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் நார்வேயின் விக்டர் துராசோவிச்சை தோற்கடித்தார். ஆனால் அடுத்த ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூடு 6-7 (3-7), 7-6 (12-10), 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜான் இஸ்நரை வீழ்த்த போட்டி 1-1 என சமநிலையை எட்டி யது.
இதையடுத்து நடைபெற்ற இரட்டையர் பிரிவில் நார்வேயின் காஸ்பர் ரூடு, விக்டர் துரா சோவிச் ஜோடி 4-6, 6-3, 10-5 என்ற செட் கணக்கில் அமெரிக்கா வின் ராஜீவ் ராம், ஆஸ்டின் கிராஜி செக் ஜோடியை வீழ்த்தியது.