இந்தியாவுக்கு பயணம் செய்யும் இலங்கை அணி 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது, இதற்கான அணியையும் கேப்டனையும் இலங்கை வாரியம் அறிவித்துள்ளது.
இதில் நுவான் பிரதீப்புக்குப் பதிலாக கசுன் ரஜிதா இடம்பெற்றுள்ளார், அணியின் கேப்டனாக அனுபவசாலி லஷித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
16 வீரர்கள் கொண்ட அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ, தனஞ்ஜய டிசில்வா, குசல் மெண்டிஸ், அஞ்சேலோ மேத்யூஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முதல் டி20 போட்டி குவஹாத்தியில் நடக்கிறது, 2, 3ம் போட்டிகள் இந்தூர், புனேயில் நடைபெறுகிறது.
இலங்கை டி20 அணி வருமாறு:
லஷித் மலிங்கா (கேப்டன்), தனுஷ்கா குணதிலக, அவிஷ்கா பெர்னாண்டோ, மேத்யூஸ், தசுன் சனகா, குசல் பெரேரா, டிக்வெல்லா, தனஞ்ஜயா, இசுரு உதனா, பனுகா ராஜபக்ச, ஒஷாதா பெர்னாண்டோ, வனிந்து அசரங்கா, லாஹிரு குமாரா, குசல் பெரேரா, சண்டகன், ரஜிதா