சென்னை சிட்டி எப்சி வீரரிடம் இருந்து பந்தை தட்டிப்பறிக்க முயற்சி செய்கிறார் ரியல் காஷ்மீர் அணி வீரர். படம்: நசிர் அகமது 
விளையாட்டு

ஐ லீக் கால்பந்து தொடர்: ரியல் காஷ்மீருக்கு முதல் வெற்றி

செய்திப்பிரிவு

ஸ்ரீ நகர்

ஐ லீக் கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சிட்டி எப்சி-யை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ரியல் காஷ்மீர் அணி.

நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் காஷ்மீர் அணியின் ஹிகின்போதமிடம் இருந்து பெற்ற கிராஸை மேசன் ராபர்ட்சன் இலக்கை நோக்கி உதைத்தார். ஆனால் அதை கோல் விழவிடாமல் சென்னை சிட்டி கோல்கீப்பர் நவுசத் கார்சியா சந்தனா தடுத்து நிறுத்தினார்.

13-வது நிமிடத்தில் எளிதாக கோல் அடிக்கும் வாய்ப்பை காஷ்மீர் அணி தவற விட்டது. தொடர் முயற்சியின் பலனாக 22-வது நிடத்தில் அந்த அணி முதல் கோலை அடித்தது. ஹிகின்போதம் உதவியு டன் இந்த கோலை டேனிஷ் பரூக் அடித் தார். இதனால் காஷ்மீர் அணி 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த 5-வது நிமிடத்தில் பாஸி அர்மண்ட் அசத்தலாக கோல் அடிக்க முதல் பாதியில் காஷ்மீர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

39-வது நிமிடத்தில் காஷ்மீர் அணி மீண்டும் ஒரு முறை கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது. மேசன் ராபர்ட் சன் இலக்கை நோக்கி உதைத்த பந்து மிக நெருக்கமாக விலகிச் சென்று ஏமாற் றம் அளித்தது. 48-வது நிமிடத்தில் சென்னை சிட்டி தனது முதல் கோலை அடித்தது. பிரவிட்டோ ராஜூ உதவியுடன் இந்த கோலை சையத் சுஹைல் பாஷா அடித்திருந்தார்.

இதன் பின்னர் கடைசி வரை இரு அணி கள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்பட வில்லை. முடிவில் ரியல் காஷ்மீர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

SCROLL FOR NEXT