விளையாட்டு

இங்கிலாந்து வீரர் ஆஷ்லே ஓய்வு

செய்திப்பிரிவு

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காததைத் தொடர்ந்து சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இங்கிலாந்து வீரர் ஆஷ்லே கோலே.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ராய் ஹாட்சன், இளம் வீரர்கள் அடங்கிய அணியை உலகக் கோப்பைக்கு அனுப்புவதாகத் தெரிவித்தார். நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன். இங்கிலாந்து அணி சிறந்த பயிற்சியாளரையும் சிறந்த வீரர்களையும் கொண்டுள்ளது. அவர்கள் வெற்றிகளைக் குவிக்க எனது வாழ்த்துகள். உண்மையான ரசிகனாக அவர்களுக்கு எனது ஆதரவை அளிப்பேன். அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

33 வயதாகும் ஆஷ்லே, 2001-ல் அல்பேனியா அணிக்கு எதிராக தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கினார். அவருடைய 14 ஆண்டுகால சர்வதேச கால்பந்து வாழ்க்கை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. அவர் இங்கிலாந்து அணிக்காக 107 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

SCROLL FOR NEXT