பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் முகமது ஹபீஸுக்கு இங்கிலாந் தில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி யின் ஆல்ரவுண்டராக திகழ்பவர் முகமது ஹபீஸ். 39 வயதான அவர் டெஸ்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது அவர் ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் பாகிஸ்தான் அணிக்காக ஆடி வருகிறார்.
இந்நிலையில் முகமது ஹபீஸ் இங்கிலாந்தில் நடைபெறும் உள் ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதனிடையே அவரது பந்து வீச்சு குறித்து சந்தேகம் எழுப் பப்பட்டது. இதைத் தொடர்ந்து முகமது ஹபீஸின் பந்துவீச்சு செயல் குறித்து வீடியோவில் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது அவர் விதி முறைகளுக்கு மாறாக பந்துவீசு வது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து முகமது ஹபீஸ் இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்து உள்ளூர் போட்டியி லும் பந்து வீச தடை விதிக்கப் பட்டுள்ளது.
இதற்கு முன்பும் ஹபீஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2005-ம் ஆண்டில் அவரது பந்து வீச்சு முறையற்றதாக இருக்கிறது என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனது பந்து வீச்சு முறையை சரி செய்து கொண்டு சர்வதேச போட்டிகளுக்குத் திரும்பினார்.
முகமது ஹபீஸ் இதுவரை 218 ஒரு நாள் போட்டி, 89 இருபது ஓவர் 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிடிஐ