ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறையா, சூர்யகுமார் என்ன தவறு செய்தார் என்று தேர்வுக்குழுவினரை ஹர்பஜன் சிங் கடுமையாகச் சாடியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சுழற்பந்துவீச்சாளர் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பளிக்காத தேர்வுக்குழுவினரைக் கடுமையாக ஹர்பஜன் குற்றம்சாட்டியுள்ளார்
சூர்யகுமார் யாதவ் 73 முதல் தரப்போட்டிகளில் விளையாடி 4,920 ரன்களில் குவித்துள்ளார், இதில் 13சதங்கள் 24 அரைசதங்கள் அடங்கும். 149 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் 3,012 ரன்கள் சேர்த்துள்ளார்.
சமீபத்தில் ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் மும்பையில் அணியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் பரோடோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 102 ரன்கள் சேர்த்தார். இதனால் பரோடா அணியை 309 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது.
ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 85 ஆட்டங்கள் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 1,548 ரனகள் சேர்த்துள்ளார், இதில் 5 அரைசதங்கள் அடங்கும்.
நியூஸிலாந்துக்கு ஏ அணிக்கு எதிரான 2 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ் ஏன் ஆஸ்திரேலியா, இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று ஹர்பஜன் சிங் தேர்வுக்குழுவினரைக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹர்பஜன் சிங் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் " எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது, சூர்யகுமார் யாதவ் என்ன தவறு செய்தார் என்று தேர்வுக்குழுவினர் ஒதுக்கி வைக்கிறார்கள். சிறப்பாகப் பேட் செய்து ரன்கள் குவிப்பதையும் தாண்டி, இந்திய அணி, இந்திய ஏ அணி, இந்திய பி அணி ஆகியவற்றிலும் விளையாடி ஏராளமான விக்கெட்டுகளை சூர்யகுமார் வீழ்த்தியுள்ளார். எதற்காக இந்திய அணியின் தேர்வுக்குழு ஒவ்வொரு வீரருக்கும், ஒவ்வொருவிதமான விதிமுறைகளை வைத்திருக்கிறது" எனக்கேள்வி எழுப்பியுள்ளார்