விளையாட்டு

பத்தாண்டுகளின் சிறந்த டெஸ்ட் அணி கேப்டன் கோலி, ஒருநாள் அணி கேப்டன் தோனி: கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

பிடிஐ

பத்தாண்டு கால சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டன் கோலி என்றும், இதே பத்தாண்டு கால சிறண்ட ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தன் இணையதளத்தில் அறிவித்துள்ளது.

பத்தாண்டு கால டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் கோலி இடம்பெற்றிருப்பது ஆச்சரியம் அல்ல. கோலி 70 சர்வதேச சதங்களை 31வயதில் எடுத்துள்ளார், ரிக்கி பாண்டிங் 71, சச்சின் 100 ஆகியோர்தான் இவருக்கு முன்னால் உள்ளனர், மேலும் அனைத்து வடிவங்களிலும் கோலி 50க்கும் மேல் சராசரி வைத்துள்ளதோடு 21, 444 ரன்களை சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எடுத்துள்ளார். இவருக்கு முன்னதாக பாண்டிங், சச்சின் ஆகியோர் உள்ளனர்.

பாண்டிங் 27,483 ரன்கள், சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்கள். சச்சின் டெண்டுல்கர் போலவே ஆஸ்திரேலியாவை கோலி நேசிப்பதற்கான அடையாளம் அங்கு கோலி 6 டெஸ்ட் சதங்களையும் 3 ஒருநாள் சதங்களையும் எடுத்துள்ளார், மாறாக சச்சின் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரேயொரு சதம் மட்டுமே எடுத்துள்ளார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் பத்தாண்டுகளின் சிறந்த டெஸ்ட் அணியில் கோலி கேப்டன், அலிஸ்டர் குக், வார்னர், வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஏ.பி.டிவில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஸ்டெய்ன், பிராட், நேதன் லயன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இரண்டு உலகக்கோப்பைகள் ஒரு சாம்பியன்ஸ் ட்ராபி, எண்ணற்ற இருதரப்பு தொடர்களை வென்ற தோனி தலைமையிலான ஒருநாள் அணியில் தோனி, கோலி, ரோஹித் சர்மா, ஹஷிம் ஆம்லா, டிவில்லியர்ஸ், ஷாகிப் அல் ஹசன், ஜோஸ் பட்லர், ரஷித் கான், ஸ்டார்க், போல்ட், மலிங்கா.

SCROLL FOR NEXT