ஐபிஎல் 2020-க்கான அன்றைய ஏலத்தில் 8 அணிகளும் மொத்தம் 62 வீரர்களைத் தேர்ந்தெடுக்க கோடிக்கணக்கில் பணத்தை இரைத்துள்ளன. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2020-ல் எப்படியாவது சாம்பியனாகி விடுவது என்று களத்திலிறங்கியிருப்பதாகத் தெரிகிறது.
வலுவான அதிரடி வீரர்களை ஷ்ரேயஸ் அய்யர் தலைமையில் இம்முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணி கொண்டுள்ளது. ஷ்ரேயஸ் அய்யர், பிரிதிவி ஷா, ஷிகர் தவண், இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய், ரஹானே, ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, ரிஷப் பந்த், ஷிம்ரன் ஹெட்மையர் கீமோ பால் என்று சாத்துமுறை அளிக்கும் மட்டையாளர்களை தன் வசம் வைத்துள்ளது.
அதேபோல் பவுலிங்கில் கிறிஸ் வோக்ஸ், இஷாந்த் சர்மா, மோஹித் சர்மா, அஸ்வின், அக்சர் படேல், அமித் மிஸ்ரா, சந்தீப் லமிஷேன், ரபாடா, கீமோ பால் ஆகியோர் உள்ளனர்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி வருமாறு:
ஷ்ரேயஸ் அய்யர், பிரிதிவி ஷா, ரஹானே, தவண், ஜேசன் ராய், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, ஆவேஷ் கான், சந்தீப் லேமிசேன், ரபாடா, கீமோ பால், மோஹித் சர்மா, லலித் யாதவ், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், அஸ்வின், ஸ்டாய்னிஸ், கிறிஸ் வோக்ஸ், ரிஷப் பந்த், அலெக்ஸ் கேரி, ஷிம்ரன் ஹெட்மையர், துஷார் தேஷ்பாண்டே.