விளையாட்டு

தங்கம் வென்றார் மீராபாய் சானு

செய்திப்பிரிவு

கத்தார் சர்வதேச கோப்பை தொடரில் மகளிருக்கான பளுதூக்குதலில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்காக வரையறை செய்யப்பட்டுள்ள ‘சில்வர் லெவல்’ தொடரான கத்தார் போட்டியில் மகளிருக்கான பளுதூக்குதலில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார். 25 வயதான மீராபாய் சானு ஸ்னாட்ச் பிரிவில் 83 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோவும் என ஒட்டுமொத்தமாக 194 கிலோ எடையை தூக்கினார்.- பிடிஐ

SCROLL FOR NEXT