விளையாட்டு

கிங்ஸ் லெவனின் ரூ.10.75 கோடி  டானிக்: ஓய்விலிருந்து திரும்பிய மேக்ஸ்வெல் அதிரடி இன்னிங்ஸ்

செய்திப்பிரிவு

மன உளைச்சல், களைப்பு காரணமாக ஓய்விலிருந்த கிளென் மேக்ஸ்வெலை நேற்று ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் அணி ரூ.10.75 கோடி என்ற பெரிய தொகைக்கு ஏலம் எடுத்தது அவருக்கு பெரிய டானிக் என்பதை நிரூபிக்கும் விதமாக பிக்பாஷ் லீகில் அதிரடி இன்னிங்ஸ் மூலம் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்துள்ளார் மேக்ஸ்வெல்.

ஆம். மன உளைச்சல் காரண ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக 39 பந்துகளில் 83 ரன்களை விளாசினார்.

ஐபிஎல் ஏலத்தொகை ரூ.10.75 கோடி அவருக்கு பெரிய டானிக்காக பிரிஸ்பன் ஹீட் அணியின் பந்து வீச்சாளர்கள் மேக்ஸ்வெலிடம் வசமாக மாட்டினர். 7 பவுண்டரிகள் 5 சிக்சர்களை விளாசி 39 பந்துகளில் 83 ரன்களை பின்னி எடுத்தார். கடைசி ஓவரில் ஹீட் வேகப்பந்து வீச்சாளர் பென் லாஃப்லினிடம் வீழ்ந்தார் மேக்ஸ்வெல்.

மேல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனும் ஆவார் கிளென் மேக்ஸ்வெல். இவர் இறங்கும் போது மெல்பர்ன் அணியின் ஸ்கோர் 74/4 என்று இருந்தது, இவருக்கு முன்பாக ஹேண்ட்ஸ்கம்ப் இறக்கப்பட்டார், இது கேப்டனின் மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகும்.

அதன் பிறகு வெளுத்துக் கட்டிய மேக்ஸ்வெல் மைதானம் நெடுக பந்தை விரட்ட ஸ்கோர் 20 ஓவர்களில் 167/7 என்று பிரிஸ்பன் ஹீட்டுக்கு சவாலானது.

SCROLL FOR NEXT