கொல்கத்தாவில் நடந்த 13-வது சீசனுக்கான ஐபிஎல் டி20 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் அதிகபட்சமான விலையில் பாட் கம்மின்ஸ் வாங்கப்பட்டுள்ளார். இது ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்சமான விலையாகும். ரூ.15.5 கோடிக்கு அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லாவை ரூ.6.75 கோடிக்கு வாங்கியது, சென்னை நேற்று வாங்கிய வீரர்கள்:பியூஷ் சாவ்லா(ரூ.6.75 கோடி), சாம் கரன்(ரூ.5.50 கோடி), ஜோஷ் ஹேசல்வுட் (ரூ.2 கோடி), ஆர் சாய் கிஷோர் (ரூ.20 லட்சம்).
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று செலவிட்ட மொத்தத் தொகை ரூ.84.85 கோடி.
இந்நிலையில் ஐபிஎல் 2020-க்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு வீரர்கள் பட்டியல் வருமாறு:
நாராயண் ஜெகதீசன், ருதுராஜ் கெய்க்வாட், கே.எம்.ஆசிப், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய், தோனி, ஜோஷ் ஹேசில்வுட், கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், கரண் சர்மா, சாவ்லா, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், ஃபாப் டு பிளெசிஸ், ஷர்துல் தாக்குர், மிட்செல் சாண்ட்ன்ர், டிவைன் பிராவோ, லுங்கி இங்கிடி, சாம் கரண், மோனு குமார், ஷேன் வாட்சன், சாய் கிஷோர்.