விளையாட்டு

கொழும்பு வெற்றி: அஸ்வின், இந்திய அணி சாதனை துளிகள்

செய்திப்பிரிவு

கொழும்பு டெஸ்ட் போட்டியில் ராகுல், ரஹானே சதங்களை எடுக்க அஸ்வின், மிஸ்ரா தலா 7 விக்கெட்டுகளை இந்த டெஸ்ட் போட்டியில் கைப்பற்ற இந்திய அணி மிகப்பெரிய அயல்நாட்டு டெஸ்ட் வெற்றி ஒன்றைப் பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தின் புள்ளி விவரங்கள் சில வருமாறு:

27 டெஸ்ட் போட்டிகளில் 12-வது முறையாக அஸ்வின் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார். முதல் 27 டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவு 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் கைப்பற்றியவர்கள் சிட்னி பார்ன்ஸ் (24), வகார் யூனிஸ் (16), இயன் போத்தம் (14), கிளாரி கிரிம்மெட் (14), ஹியூ டேபீல்ட் (13), ஃபாசல் மஹ்மூத் 27 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் போலவே 12 முறை இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை சுபாஷ் குப்தே 11 முறை கைப்பற்றியுள்ளார், தற்போது அஸ்வின் அவரைக் கடந்துள்ளார்.

இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி உள்ள நிலையில் 2 டெஸ்ட்டில் அஸ்வின் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளமை இலங்கைத்தொடரில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த இந்திய பவுலர் என்ற பெருமையை பெற்றுத் தந்துள்ளது. 2008 இலங்கை தொடரில் ஹர்பஜன் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார், அதனை தற்போது முறியடித்தார் அஸ்வின். மேலும் இலங்கை தொடரில் ஒரு இந்திய பவுலர் இருமுறை 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் கைப்பற்றுவதும் இதுவே முதல் முறை.

வெற்றிகளில் அஸ்வினின் 5 விக்கெட்டுகள் பங்களிப்புகள் இது 9-வது முறையாகும். அனில் கும்ளே 20 முறையும் ஹர்பஜன் 14 முறையும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போது இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்ப்பிடத்தக்கது.

இலங்கையை அணியை 278 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது, இன்னிங்ஸ் வெற்றிகள் இல்லாமல் 4-வது பெரிய வெற்றியாகும். ஹெடிங்லேயில் 1986-ம் ஆண்டு 279 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு பெரிய வெற்றியாகும் இது. மொத்தமாக 10-வது மிகப்பெரிய வெற்றியாகும் இது.

இதற்கு முன்பாக இலங்கையில் முதல் டெஸ்ட் போட்டியில் தோற்று 2-வதில் வெற்றி பெற்றது 2001 மற்றும் 2008-ல் இருமுறை நடந்துள்ளது. மொத்தமாக இந்தியா இத்தகைய வெற்றிகளை 10 முறை கண்டுள்ளது.

அயல்நாட்டில் முதல் வெற்றி பெறும் இந்திய கேப்டன்களில் கோலி 5-வது அயல்நாட்டு டெஸ்ட் போட்டியிலேயே வெற்றி கண்டு சாதித்துள்ளார். அசாருதீன் 18 முயற்சிகளுக்குப் பிறகே முதல் அயல்நாட்டு வெற்றியை ஈட்டினார், கபில்தேவ் 12 முயற்சிகளுக்குப் பிறகே முதல் அயல்நாட்டு வெற்றியை ஈட்டினார்.

SCROLL FOR NEXT