விளையாட்டு

ரோஹித் சர்மா எட்டிய இன்னொரு பேட்டிங் மைல்கல்; ராகுலின் அரைசதம்

செய்திப்பிரிவு

விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வரும் வாழ்வா சாவா 2வது ஓருநாள் போட்டியில் முதலில் இந்திய அணியை பேட் செய்ய மே.இ.தீவுகள் கேப்டன் பொலார்ட் அழைத்ததன் அடிப்படையில் ரோஹித் சர்மாவும், ராகுலும் சற்றுமுன் வரை விக்கெட்டை இழக்காமல் ஆடி வருகின்றனர்.

19 ஓவர்களில் 95 ரன்களையே இந்திய அணி எடுத்துள்ளது, ஒரு கட்டத்தில் ஓவருக்கு 5.68 என்ற விகிதத்தில் சென்று கொண்டிருந்த ரன் விகிதம் தற்போது மந்தமடைந்துள்ளது.

அதாவது கடைசி 5 ஓவர்களில் 18 ரன்களையே ரோஹித்தும், ராகுலும் எடுக்க முடிந்துள்ளது.

ரோஹித் சர்மா 59 பந்துகளில் 40 என்று மந்தமடைந்துள்ளார், ராகுல் 54 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 53 என்று சரியாகச் சென்று கொண்டிருக்கிறார்.

ஆனாலும் ரோஹித் இன்னொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அவர் 11,000 ரன்களைக் கடந்து சாதனை புரிந்துள்ளார். 291 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் ரோஹித் சர்மா

SCROLL FOR NEXT