படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

மே.இ.தீவுகள் அணிக்கு ஊதியத்தில் 80 சதவீதம் அபராதம் : ஐசிசி அதிரடி உத்தரவு

பிடிஐ

கேப்டன் பொலார்ட் தலைமையிலான மேற்கி்ந்தியத்தீவுகள் அணிக்கு 80 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது

சென்னையில் நேற்று இந்தியா, மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் ஆட்டம் நடந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட்டில் வீழ்த்தியது மே.இ.தீவுகள் அணி.

இந்த போட்டியில் முதலில் பந்துவீசிய மேற்கிந்தியத்தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பந்துவீசாமல் அதிகமான நேரம் எடுத்துக்கொண்டது.

குறிப்பாக கடைசி 4 ஓவர்களை வீசுவதற்கு அதிகமான நேரத்தை மே.இ.தீவுகள் அணி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பந்துவீசாத மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில் " ஐசிசியின் விளையாட்டு வீரர்களுக்கான விதிமுறைகள் படி, போட்டியில் பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பந்துவீசாமல் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டால் குறைந்தபட்சம் 20 சதவீதம் வீரர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும். ஆனால், மே.இ.தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதலான நேரத்தை எடுத்து 4 ஓவர்கள் வரை வீசியுள்ளனர்.ஆதலால், 80 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக கேப்டன் பொலார்ட்டிடம் எந்தவிதமான முறையான விசாரணையும் நடத்தப்படவில்லை. போட்டி முடிந்தபின் தங்கள் மீதான அபராதம் விதிப்புக்கு மே.இ.தீவுகள் கேப்டன் பொலாரட் சம்மதம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT