அமெரிக்காவின் ஹோஸ்டன் நக ரில் நடைபெறவுள்ள சீனியர் உலக பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்கவுள்ள 14 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட் டுள்ளது.
ரியா ஒலிம்பிக் போட்டியின் தகுதிச்சுற்று போட்டியான இதில் சதீஷ் குமார், சஞ்சிதா சானு ஆகியோர் தலைமையில் இந்திய அணி கலந்துகொள்கிறது.
இந்திய அணியில் 7 வீரர்களும், 7 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர 4 பயிற்சியாளர்கள், மசாஜ் நிபுணர் ஒருவர் மற்றும் முடநீக்கியல் நிபுணர் ஒருவர் ஆகியோரும் இந்திய அணியுடன் செல்கிறார்கள்.
உலக சாம்பியன்ஷிப் போட் டிக்கு முன்னதாக வெளிநாட்டில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்கிறது இந்திய அணி.
ஆடவர் அணி:
சுகேன் தேய் (56 கிலோ எடைப் பிரிவு), ஜம்ஜங் தேரு (56 கிலோ), அபூர்வா சேத்தியா (62 கிலோ), தீபக் லேதர் (62 கிலோ), பபுல் சங்மாய் (69 கிலோ), சதீஷ் குமார் (77 கிலோ), கோஜும் தாபா (77 கிலோ).
மகளிர் அணி:
சஞ்சிதா சானு (48 கிலோ), மீராபாய் சானு (48 கிலோ), மத்ஸா சந்தோஷி (53 கிலோ), பங்காரு உஷா (53 கிலோ), பிரமிளா கிரிசானி (58 கிலோ), மினாட்டி சேத்தி (58 கிலோ), பூனம் யாதவ் (63 கிலோ).