சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற முடிவை மாற்றி ஓய்வுபெறுவதைக் கைவிட்டார் டிவைன் பிராவோ, இதனையடுத்து டி20 அணித்தேர்வுக்கு தன் பெயரைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் டிவைன் பிராவோ.
மேற்கிந்திய அணியின் ஆல்ரவுண்டரும் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரருமான டிவைன் பிராவோ அக்டோபர் 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கடைசியாக 2016-ம் ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆடினார்.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சர்வதேச கிரிக்கெட்டிற்கு நான் மீண்டும் திரும்பும் அறிவிப்பை உறுதி செய்கிறேன். வாரியத்தின் நிர்வாக மட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.