ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி தோல்வியடைந்தது.
நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்த ஜோடி சீன தைபேவின் சூ விய் ஹிசிச், சுய் பென்ங் ஜோடியை எதிர்கொண்டது. இதில் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் சானியா ஜோடி வென்றது. எனினும் அடுத்த இரு செட்களை 1-6,8-10 என்ற கணக்கில் சானியா ஜோடி இழந்து தோல்வியடைந்தது.
ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, பாகிஸ்தானின் குரேஷி ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் ஆண்ட்ரியஸ் சிபி, கனடாவின் மிலாஸ் ரயோனிக் ஜோடியை சந்திக்கிறது.