விளையாட்டு

ரஜினிக்கு தமிழில் வாழ்த்து கூறிய லிட்டில் மாஸ்டர்

செய்திப்பிரிவு

ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிச.12) தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, ரசிகர்களும்,பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து தமிழில் ட்வீட் செய்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

இதுகுறித்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ பிறந்த நாள் வாழ்த்துகள் ரஜினிகாந்த் சார். திரையில் வெளிப்படும் உங்கள் ஸ்டைல், நிஜத்தில் உங்களது பணிவு ஆகியவை உங்களை ஒவ்வொரு தர்பாருக்கும் தலைவன் ஆக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி 2020-ம் ஆண்டு ஜனவரியில் வெளியாக உள்ளது.

ரஜினிகாந்தின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து சொல்லும் ஹேஷ்டேகுகளை உருவாக்கியுள்ளனர். அது இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. #HBDThalaivarSuperstarRAJINI, #HBDSuperstarRajinikanth ஆகிய ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் ட்ரெண்டாவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT