இலங்கை அணியின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாகக் கருதப்படும் குமார் சங்ககாரா இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக் கெட்டிலிருந்து பிரியா விடை பெற்றார்.
சங்ககாராவின் 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை மிக உணர்ச்சி பூர்வமாக அவருடைய தாய் மண்ணில் முடிவுக்கு வந்திருக் கிறது. இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தனது பெற் றோர்கள், நண்பர்கள், உறவினர் கள் மற்றும் சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் விடை பெற்றிருக்கிறார்.
போட்டி முடிந்த பிறகு கனத்த இதயத்தோடு பேசிய சங்ககாரா, “நான் அடித்த சதம், உலகக் கோப்பை வெற்றி உள்ளிட்ட என் னுடைய சாதனைகளைப் பற்றி எல்லோரும் கேட்கிறார்கள். ஆனால் நானோ, கடந்த 30 ஆண்டுகளாக என்னுடன் இருக்கும் நண்பர் களையே சாதனையாக பார்க்கி றேன். அவர்கள் எனது ஆட்டத் தைப் பார்ப்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்.
நான் தோற்றாலும் சரி, வென்றாலும் சரி என்னுடைய வீட்டுக்கு செல்ல முடிந்தது. எப்போதுமே ஒரே மாதிரி யான அன்பை எனது குடும்பத்தினர் என்னிடம் காட்டினார்கள். அதைத் தான் நான் மிகப்பெரிய சாதனையாக பார்க்கிறேன். இந்த நேரத்தில் நான் படித்த பள்ளியின் முதல்வர்கள், பயிற்சியாளர்கள், இந்தத் தொடரில் என்னோடு விளையாடிய இந்திய வீரர்கள், எனது முன்னாள் கேப்டன்கள், சகவீரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு உத்வேகம் கொடுத்தது எது என எல்லோரும் கேட்கிறார்கள். எனது பெற்றோர்களைத் தாண்டி வேறு எதுவும் எனக்கு உத்வேகம் கொடுத்ததாக பார்க்க வில்லை. நான் உங்களை (பெற்றோர்களை) தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக இதைக்கூற வில்லை. நீங்கள்தான் எனக்கு உத்வேகம் அளித்தீர்கள். எனது பெற்றோர் மற்றும் குழந்தை களை பார்த்து நான் வியந்திருக் கிறேன். நான் விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் அவர்கள் எனக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். வீட்டில் இருக்கும்போது மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந் திருக்கிறேன்” என்றார்.
இறுதியாக இலங்கை கேப்டன் ஏஞ்செலோ மேத்யூஸைப் பார்த்துப் பேசிய சங்ககாரா, “நீங்கள் வியக்கத்தக்க அணியை பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. பயமின்றி இருங்கள். வெற்றிக்காக விளையாடும்போது தோல்வியைக் கண்டு அஞ்சாதீர்கள்” என்றார்.
சங்ககாராவை முன்னாள் கிரிக் கெட் வீரர்கள் கிளப்புக்கு வர வேற்பதாக கூறிய முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ் கர், ‘இலங்கை கிரிக்கெட் அணி யின் டிரெஸ்ஸிங் அறையில் நீங்கள் அனைவருக்கும் முன்மாதிரி யாக, வழிகாட்டியாக இருந்திருக் கிறீர்கள். நீங்கள் பேட்டால் பந்தை அடிக்கும்போது எழும் சத்தம், அந்த பந்து பவுண்டரியை சென்ற டையும் வரையில் ஒலித்துக் கொண்டே இருக்கும். கிரிக்கெட் ரசிகர்கள் உங்களை ஒருபோதும் மறக்கமாட்டார்கள்” என்றார்.
இலங்கை அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் சங்ககாராவுக்கு நினைவுப் பரிசை வழங்கி பாராட்டினர். முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்காவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்திய வீரர்கள் அனைவருடைய கையெழுத்தும் பொறிக்கப்பட்ட டி-சர்ட் ஒன்றை சங்ககாராவுக்கு பரிசளித்தார் இந்திய கேப்டன் விராட் கோலி.
37 வயதான சங்ககாரா 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 12,400 ரன்கள் குவித்துள்ளார். 404 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14,234 ரன்கள் குவித்துள்ளார்.
ஐசிசி பாராட்டு
சங்ககாராவுக்கு ஐசிசி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைமைச் செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்ஸன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லா காலங்களிலும் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரும், தூதருமான சங்ககாரா சரியான நேரத்தில் ஓய்வு பெற்றிருக்கிறார். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பேட்டிங், விக்கெட் கீப்பிங் ஆகிய வற்றில் சிறப்பாக செயல்பட்ட தோடு, மற்றவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருந்திருக்கி றார்” என குறிப்பிட்டுள்ளார்.
கோலி புகழாரம்
சங்ககாரா உங்களின் கிரிக் கெட் சாதனைகளை பற்றி விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. பலருக்கு உத்வேகம் அளித்த நீங்கள், அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்திருக் கிறீர்கள். உங்களுடைய காலத் தில் விளையாடியதை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். உங்க ளையும், உங்கள் குடும்பத்தையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என இந்திய கேப்டன் கோலி தெரி வித்துள்ளார்.
கில்கிறிஸ்ட் வாழ்த்து
சங்ககாரா தலைசிறந்த வீரர் களில் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதிபயங்க ரமான கிரிக்கெட் வீரர்களில் அவரும் ஒருவர்.
அவருடைய எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள் என முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனுக்கான இலங்கை தூதர் பதவி
சங்ககாராவைப் பாராட்டிப் பேசிய இலங்கை அதிகர் மைத்ரிபால சிறிசேன, “இலங்கையின் மிகச்சிறந்த முகமாக சங்ககாரா திகழ்கிறார். பிரிட்டனுக்கான இலங்கை தூதர் பதவியை அவருக்கு வழங்குவதாக அறிவிப்பதில் மிகப்பெரிய மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.