நியூசவுத்வேல்ஸ் காட்டுத்தீயினால் சிட்னி இன்று டெல்லி போல் ஆனது, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் புகைமூட்டம் வீரர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தியதாக உஸ்மான் கவாஜா தெரிவித்தார்.
“இன்று காலை இங்கு வந்த போது இந்தியாவில் ஆடுவது போல் உணர்ந்தோம்” என்று உஸ்மான் கவாஜா சிட்னி மார்னிங் ஹெரால்டில் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “மூச்சு விடுவது கடினமாக இருந்தது. ஏகப்பட்ட புகைமூட்டம். 5 நிமிடங்கள்தான் மைதானத்தில் நிற்க முடிந்தது, அதற்குள் தொண்டைக்குள் புகை சென்றது. இதில் பவுலர்கள் நீண்ட நேரம் வீசியது எப்படி என்று ஆச்சரியமாக இருந்தது, கடினமாக இருந்ததே தவிர விளையாடவே முடியாது என்பது போன்று இல்லை.
ஆனால் முன்னாள் வீரர் ஓ கீஃப் கூறும்போது, இந்தியாவை விட மோசமாக இருந்தது, ஒருகட்டத்தில் புகைமூட்டத்தில் ஒன்றுமே தெரியவில்லை. அந்தப் புகையில் நின்றால் நாளொன்றுக்கு 80 சிகரெட்களை புகைத்தது போல் ஆகும் என்று தன் வழக்கமான நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார்.