வளரும் ஆல்ரவுண்டர் ரெக்ஸ் சிங். (வலது) 
விளையாட்டு

10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மீண்டும் அசத்தி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

செய்திப்பிரிவு

கூச்பேஹார் கிரிக்கெட் ட்ராபியில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ரெக்ஸ்சிங் நேற்று ரஞ்சி டிராபி தொடக்க நாளில் மிஜோரம் அணியை 65 ரன்களுக்குச் சுருட்டிய மணிப்பூர் அணிக்காக 22 ரன்களைக் கொடுத்து 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெறுகிறது இந்த ரஞ்சி டிராபி போட்டி. ரெக்ஸ் சிங் இர்பான் பத்தானுக்குப் பிறகு சிறந்த ஆல்ரவுண்டராக வர வாய்ப்புள்ளது.

இவர் 10 விக்கெட்டுகளையும் எடுத்த வீடியோ முன்பு சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. யார் இந்த ரெக்ஸ் சிங் என்று அனைவரும் ஆச்சரியத்தில் ஆழந்தனர்.

இந்த ரெக்ஸ் சிங் தான் நேற்று மிசோரம் அணிக்கு எதிரான மணிப்பூர் அணி ஆடிய ரஞ்சி போட்டியில் மணிப்பூர் அணிக்காக 22 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிசோரம் அணி 65 ரன்களுக்குச் சுருண்டது.

6 மிஜோரம் பேட்ஸ்மென்கள் டக் அவுட் ஆகினர். 3 வீரர்கள் இரட்டை இலக்க ரன்களை எட்டினர். தொடர்ந்து ஆடிய மணிப்பூர் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது.

பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய ரெக்ஸ் சிங் பேட்டிங்கிலும் 58 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

SCROLL FOR NEXT