விளையாட்டு

ஆந்திரா-விதர்பா ரஞ்சி ட்ராபி போட்டியில் மைதானத்துக்குள் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு

செய்திப்பிரிவு

விஜயவாடாவில் ஆந்திரா-விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி போட்டி நடைபெறும் போது மைதானத்துக்குள் பாம்பு நுழைந்ததால் தொடக்கம் தாமதமானது.

டாஸ் முடிந்தவுடன் மைதானத்தின் விளையாடும் பகுதிக்குள் பாம்பு நுழைந்தது.

டாஸ் முடிந்து வீரர்கள் மைதானத்துக்குள் இறங்கி விளையாடத் தயாராக இருந்த போது பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, இதனையடுத்து ஆட்டம் தாமதமாகத் தொடங்கப்பட்டது.

பிறகு மைதான பணியாளர்கள் பாம்பை விரட்டியடித்தனர்.

இது குறித்த வீடியோ:

SCROLL FOR NEXT