இந்திய கிரிக்கெட் அணி வீரரான மணீஷ் பாண்டே, தென்னிந்திய நடிகையான அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார. சையது முஸ்டாக் அலி டி 20 தொடரின் இறுதி ஆட்டம் நேற்று முன்தினம் சூரத் நகரில் நடைபெற்றது.
பரபரப்பாக அமைந்த இந்த ஆட்டத்தில் மணீஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழக அணியை வென்று சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றதில் மணீஷ் பாண்டே சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார்.
பேட்டிங்கின் போது 45 பந்துகளில் 60 ரன்கள் விளாசி 181 ரன்கள் இலக்கை கொடுக்க பெரிதும் உதவினார். பீல்டிங்கிலும் அசத்திய அவர் இரு கேட்ச்களை செய்ததோடு கடைசி ஓவரில் மின்னல் வேகத்தில் த்ரோ செய்து விஜய் சங்கரை ரன் அவுட் செய்ய உறுதுணையாக இருந்தார். இந்நிலையில் மும்பையில் நேற்று மணீஷ் பாண்டேவுக்கு திருமணம் நடைபெற்றது. தென்னிந்திய நடிகையான அஷ்ரிதா ஷெட்டியை, மணீஷ்பாண்டே மணந்தார்.
அஷ்ரிதாஷெட்டி 2013-ல் தமிழில் வெளியான சித்தார்த் நடித்த உதயம் என்ஹெச் 4 படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து ஒரு கன்னியும் 3 களவாணிகளும், இந்திரஜித், நான் தான் சிவா ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
மணீஷ் பாண்டே - அஷ்ரிதா ஷெட்டி திருமணத்தில் இரு வீட்டு நெருங்கிய உறவினர்கள் மற்றும் கிரிக்
கெட்வீரர்கள் கலந்து கொண்டனர். 30 வயதான மணீஷ் பாண்டே இந்திய அணிக்காக 23 ஒருநாள் போட்டி, 32 டி 20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற தொடரிலும் அவர் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.