இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூஸிலாந்து வீரர் டாம் லேதம் சதம் விளாசினார்.
ஹாமில்டன் நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை யடுத்து பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து 39 ரன்களை சேர்ப் பதற்குள் 2 விக்கெட்களை இழந் தது. ஜீத் ராவல் (5), ஸ்டூவர்ட் பிராடு பந்திலும் கேப்டன் கேன் வில்லியம்சன் (4), கிறிஸ் வோக்ஸ் பந்திலும் சிலிப் திசையில் நின்ற ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.
இதன் பின்னர் டாம் லேதமுடன் இணைந்த ராஸ் டெய்லர் இன் னிங்ஸை சிறப்பாக கட்டமைத்தார். ராஸ் டெய்லர் 99 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் தனது 32-வது அரை சதத்தையும், டாம் லேதம் 159 பந்துகளில், 15 பவுண்டரி களுடன் தனது 11-வது சதத்தை யும் விளாசினர். சுமார் 34 ஓவர்கள் களத்தில் நிலை பெற்றிருந்த இந்த ஜோடியை கிறிஸ் வோக்ஸ் பிரித்தார்.
அவரது பந்தில் ராஸ் டெய்லர் (53), முதல் சிலிப்பில் நின்ற ஜோ ரூட்டிடம் பிடிகொடுத்து ஆட்ட மிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு டாம் லேதமுடன் இணைந்து ராஸ் டெய்லர் 116 ரன்கள் சேர்த்தார். நியூஸிலாந்து அணி 54.3 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.
டாம் லேதம் 101, ஹென்றி நிக் கோல்ஸ் 5 ரன்களுடன் ஆட்ட மிழக்காமல் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் முதல் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.