பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. பிரிஸ்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ் திரேலிய அணியிடம் இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
இந்த டெஸ்டில் பாகிஸ்தான் அணி தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினாலும் அந்த அணியின் 5 வீரர்கள் இணையதளத் தில் பலரின் இதயங்களை வென்ற னர். இதற்கு காரணம் இங்கிலாந்து வர்ணணையாளரான அலிசன் மிட்செல், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மிட்செல் ஜான் சனிடம் மனதை தொடும் வகையில் கூறிய கதைதான். அதில் யாசிர் ஷா, ஷாஹீன் அப்ரீடி, நசீம் ஷா உள்ளிட்ட 5 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் போது அலிசன் மிட்செல், மிட்செல் ஜான்சன் ஆகியோர் இணைந்து வர்ணணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அலிசன் மிட்செல் மனதை வருடும் கதையை வர்ணித் தார். அவர் கூறுகையில், “இந்தியாவைச் சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் காலை பொழுதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலரை பிரிஸ்பன் மைதானத்தில் இறக்கி விட்டுச் சென்றார். சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் அணி தங்கியிருந்த ஓட்டலில் இருந்து அந்த இந்திய டிரைவருக்கு போனில் அழைப்பு வந்தது.
இதைத் தொடர்ந்து அந்த டிரைவர் ஓட்டலுக்கு சென்று யாசிர் ஷா உள்ளிட்ட 5 வீரர்களை வெளியே அழைத்துச் சென்றார். அப்போது பாகிஸ்தான் வீரர்கள் சாப்பிடுவதற்காக இந்திய உணவு விடுதிக்கு செல்ல விரும்பினர். இதைத் தொடர்ந்து டிரைவர், அவர்களை அங்கு அழைத்துச் சென்றார்.
அப்போது பாகிஸ்தான் கிரிக் கெட் வீரர்கள், கார் ஒட்டுநருக்கு கட்டணம் வழங்கினர். இதை வாங்க ஓட்டுநர் மறுத்துவிட்டார். இதனால் நெகிழ்ந்து போன பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கார் ஒட்டுநரை தங்களுடன் உணவு விடுதிக்குள் அழைத்துச் சென்று விருந்து அளித்தனர். இதோ பாருங்கள் அதுதொடர்பான புகைப்படங் கள். இதில் கார் ஒட்டுநர், பாகிஸ் தான் கிரிக்கெட் வீரர்களுடன் உணவு விடுதியில் அமர்ந்துள்ளார்” என்றார்.
வர்ணணையின் போது அலிசன் மிட்செல் கூறியதை ஏபிசி கிராண்ட்ஸ்டாண்ட் ஒளிபரப்பு நிறுவனம் தனது ட்விட்டரில் பதி வேற்றம் செய்துள்ளது. இது தற் போது வைரலாகி வருகிறது.