கிறிஸ் கெயில் : படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

சேட்டைக்கார கெயில்: அவுட் அளிக்காத நடுவரிடம் அடம்பிடித்து அழுது சிரிக்க வைத்த சுவாரஸ்யம்

செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்காவில் நடந்து மான்ஸி சூப்பர் லீக் டி20 போட்டியில் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் அவுட் அளிக்காத நடுவரிடம் அடம் பிடித்து அழுத சம்பவம் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது

தென் ஆப்பிரிக்காவில் மான்ஸி சூப்பர் லீக் டி20 போட்டி நடந்து வருகிறது. இதில் மே.இ.தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் ஜோஸி ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த சனிக்கிழமை பார்ல் நகரில் நடந்த ஆட்டத்தில் ஜோஸி ஸ்டார்ஸ், பார்ல் ராக்கர்ஸ் அணி மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஜோஸி ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்தது. கெயில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

130 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பார்ல் ராக்கர்ஸ் அணி 16.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இதில் முதல் ஓவரை கெயில் வீசினார். டெல்போர்ட், டேவிட் இருவரும் களத்தில் இருந்தனர். 4-வது பந்தை டெல்போர்ட் எதிர்கொண்டார். கெயில் வீசிய பந்தை டெல்போர்ட் கால்காப்பில் வாங்கினார். அப்போது அவுட் கேட்டு நடுவரிடம் கெயில் முறையிட்டார்.

அப்போது நடுவர் அவுட் தரமுடியாது என்று கூறவே. கெயில் தன்னிலை மறந்து சிறுபிள்ளை போல் அழுது, அடம்பிடித்தார். இதை முதலில் கண்ட நடுவர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் கெயிலின் செயலைக் கண்டு சிரித்தவாரே கெயிலை சமாதானம் செய்து பந்துவீசச் செய்தார். கெயிலின் வித்தியாசமான செயலைப் பார்த்து களத்தில் இருந்த அனைத்து வீரர்களும் சிரித்தனர்

SCROLL FOR NEXT