கமின்ஸ் நோ-பால். 
விளையாட்டு

சந்தேகத்தின் பலனை பவுலருக்கா வழங்குவது? : ரிஸ்வான் அவுட் ஆன பந்து நோ-பால்- வர்ணனையாளர்கள் கருத்து 

செய்திப்பிரிவு

கிரிக்கெட்டின் அடிப்படை மரபு நடுவருக்கு ஒரு தீர்ப்பின் மீது ஐயம் எழுந்தால் அதன் பலனை பேட்ஸ்மென்களுக்குத்தான் வழங்க வேண்டும், ஏனெனில் பேட்ஸ்மென்களுக்கு இரண்டாம் வாய்ப்பு கிடையாது, அவுட் என்றால் அவுட்தான், ஆனால் பவுலருக்கு அடுத்த பந்து, அடுத்த ஓவர் என்று அதே பேட்ஸ்மெனை வீழ்த்த வாய்ப்புள்ளது.

இன்று பிரிஸ்பனில் தொடங்கிய பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆன பந்து கமின்ஸினுடைய நோ-பால் என்பது ரீப்ளேயில் தெள்ளத் தெளிவு கமின்ஸின் முன் காலின் எந்த ஒரு மிமீ பகுதியும் பவுலிங் கிரீசிற்குள் இல்லை, ஆனால் 3வது நடுவர் ஏகப்பட்ட ரீப்ளேக்களைப் பார்த்து விட்டு எப்படி அது நோ-பால் இல்லை என்று கூறுவார்? சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மெனுக்கு வழங்குவதற்குப் பதிலாக பவுலருக்கா வழங்குவது என்று போட்டி வர்ணனையில் இருந்தவர்கள் கடுமையாக 3ம் நடுவர் மைக்கேல் காஃபை சாடினர்.

ரிஸ்வான் பவுண்டரிகளாக விளாசிக் கொண்டிருந்த சமயம் அது, 34 பந்துகளில் அவர் 7 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்திருந்த சமயம். துரதிர்ஷ்டவசமாக நோ-பாலில்

கமின்ஸ் இது தொடர்பாகக் கூறும்போது, “நான் ஸ்கோர் பலகையைப் பார்த்தேன் அது விக்கெட் என்றது. என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. விக்கெட் விழுந்த பிறகு 3ம் நடுவரிடம் செல்வது எனக்கு நல்லதாகப் படவில்லை” என்றார்.

வக்கார் யூனிஸ் இது தொடர்பாக கூறும்போது, “நியாயமாகப் பார்த்தால் அது நோபால்” என்றார்.

வரணனையில் இருந்த ஜேசன் கில்லஸ்பி, “இது தவறான தீர்ப்பு, இது நோ-பால் பேட்ஸ்மென் ரிஸ்வான் மீண்டும் பேட் செய்ய அழைக்கப்பட வேண்டும்” என்றார்.

சேனல் 7-ல் ரிக்கி பாண்டிங், “நான் பார்த்தவரையில் முன்காலின் எந்த ஒரு பகுதியும் கிரீஸிற்குள் இல்லை, கமின்ஸின் நோ-பால் அது. ஆனால் கிளென் மெக்ரா மிமீ கால் உள்ளேயிருந்தது என்கிறார். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை, பாதத்தின் எந்த ஒரு பகுதியும் கோட்டுக்குள் இல்லை” என்றார்.

SCROLL FOR NEXT