விளையாட்டு

வாஷிங்டன் ஓபன்: நிஷிகோரி சாம்பியன்

ஏஎஃப்பி

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பானின் கெய் நிஷிகோரி சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்ட னில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஆசியாவின் முதல் நிலை வீரரான நிஷிகோரி 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை தோற்கடித்து சாம்பியன் ஆனார். இது நிஷிகோரி வென்ற 10-வது ஏடிபி பட்டமாகும்.

கடந்த அமெரிக்க ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவ ரான நிஷிகோரி, இப்போது அமெரிக்க ஓபனின் பயிற்சி போட்டியான வாஷிங்டன் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். அமெரிக்க ஓபன் தொடங்க இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் நிஷிகோரி பெற்றுள்ள இந்த அதிரடி வெற்றி, மற்ற வீரர்களுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.

இறுதிப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிஷிகோரி, “இந்த வெற்றி எனக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என உறுதியாக நம்புகிறேன். அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடுவதற்கு இந்த வெற்றி முக்கிய

மானதாகும். அமெரிக்க ஓபனில் மீண்டும் விளையாடுவதை எதிர் பார்த்து காத்திருக்கிறேன். அதில் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறுவதில் ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

இந்த சீசனில் 3-வது சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிஷிகோரி, புதிய தரவரிசை வெளியாகும்போது 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேறுவார். 47 ஆண்டுகால வாஷிங்டன் ஓபன் வரலாற்றில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஆசியர் நிஷிகோரி என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT