ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கிரீஸ் வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ். 
விளையாட்டு

ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரில்  சாம்பியன் பட்டம் வென்றார் சிட்சிபாஸ்

செய்திப்பிரிவு

ஏடிபி உலக டூர் பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் கிரீஸ் வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

லண்டன் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் 6-ம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ், 5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை எதிர்த்து விளையாடினார். இதில் 21 வயதான சிட்சிபாஸ் 6-7 (6-8), 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன் மூலம் 2001-ம் ஆண்டுக்கு பிறகு இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார் சிட்சிபாஸ். 15 வருடங்களாக டென்னிஸ் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்பெயினின் ரபேல் நடால், செர்பியாவின் ஜோகோவிச், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோர் இந்தத் தொடரில் பங் கேற்ற போதிலும் சாம்பியன் பட்டம் வென்று அனைவரது கவனத் தையும் ஈர்க்கச் செய்துள்ளார் சிட்சிபாஸ்.

- ஏஎப்பி

SCROLL FOR NEXT