விளையாட்டு

5 வீரர்களை விடுவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

செய்திப்பிரிவு

ஐபிஎல் 2020 வீரர்கள் ஏலம் வரவிருப்பதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வீரர்களை விடுவித்துள்ளது.

சாம் பில்லிங்ஸ், சைதன்ய பிஷ்னாய், துருவ் ஷோரி, டேவிட் வில்லே, மோஹித் சர்மா ஆகிய வீரர்களை சிஎஸ்கே விடுவித்துள்ளது.

2019 ஐபிஎல் தொடரிலிருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லே தனக்கு 2வது குழந்தை பிறந்ததையடுத்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது விலகல் காயம் காரணமாக இல்லாததால் இவருக்கு மாற்று வீரர் சேர்க்கப்பட முடியவில்லை.

2018 சீசனில் கேதார் ஜாதவ் காயமடைந்ததையடுத்து மாற்று வீரராக டேவிட் வில்லே சேர்க்கப்பட்டார்.

இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் கைவசம் ரூ.12 கோடியுடன் ஏலத்தை எதிர்கொள்ளவிருக்கிறது.

SCROLL FOR NEXT