விளையாட்டு

அரை இறுதியில் சாட்விக்-ஷிராக் ஜோடி

செய்திப்பிரிவு

புஸோவ்

சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.

சீனாவின் புஸோவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி சீனாவின் லி ஜுன் ஹுய், லியு யூ சென் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

இதில் சாட்விக் - ஷிராக் ஜோடி 21-19, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் அரை இறுதியில் சாட்விக் - ஷிராக் ஜோடியானது உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் மார்கஸ் பெர்னால்டி கிதியோன், கெவின் சஞ்சய சுகமுல்ஜோ ஜோடியை எதிர்கொள்கிறது.

SCROLL FOR NEXT