இலங்கை அணிக்கு எதிராக புதன்கிழமை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பின் தொடை தசைநார் காயம் காரணமாக அவர் விளையாடமாட்டார் என்று ரவிசாஸ்திரி செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
முரளி விஜய்க்குப் பதிலாக லோகேஷ் ராகுல் விளையாடுகிறார்.
இது குறித்து ரவி சாஸ்திரி கூறும்போது, “விஜய் முழுதும் உடல்தகுதியுடன் இல்லை, எனவே நாங்கள் அவரை விளையாடவைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. நீண்ட இன்னிங்ஸை ஆடக்கூடிய ஃபார்மில் உள்ள அவர் ஆடமுடியாமல் போனது ஒரு பெரிய பின்னடைவே” என்றார்.
கடைசி 10 டெஸ்ட் போட்டிகளில் முரளி விஜய் விஜய் 1000 ரன்களை 19 இன்னிங்ஸ்களில், 54.42 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். இதில் 3 சதங்கள் 6 அரைசதங்கள் அடங்கும்.
3-ம் நிலையில் தொடர்ந்து தடுமாறி வரும் ரோஹித் சர்மாவே விளையாடுவார் என்று தெரிகிறது. எனவே புஜாரா மீண்டும் உட்காரவைக்கப்படலாம் என்றே அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.