நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் : கோப்புப்படம் 
விளையாட்டு

தடையில் இருந்து தப்பித்தார் கேன் வில்லியம்ஸன்: ஐசிசி பச்சைக்கொடி

செய்திப்பிரிவு

வெலிங்டன்

நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சில் எந்தவிதமான குறைபாடும் இல்லை, அவர் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பந்துவீசலாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நியூஸிலாந்து அணி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீசினார். ஆப்-ஸ்பின்னரான வில்லியம்ஸன் பந்துவீச்சில் அப்போது நடுவருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து போட்டி முடிவில் போட்டி நடுவரிடம் புகார் அளித்தார். அந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இருப்பினும், நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சில் உள்ள குறைபாடுகளை அவர் சரி செய்ய வேண்டும், அவரின் முழங்கை அசைவு பகுதியை சரி செய்யவேண்டும் என்று ஐசிசி தெரிவித்திருந்தது. இதற்காக கடந்த மாதம் இங்கிலாந்து சென்றிருந்த கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சு பயிற்சி எடுத்து, ஐசிசியின் சோதனையில் பங்கேற்றுபந்துவீசினார்.

வில்லியம்ஸன் பந்துவீச்சு சோதனையின் முடிவை ஐசிசி இன்று வெளியிட்டது, அதில், " நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சில் அவரின் முழங்கை ஐசிசி விதிமுறைக்கு உட்பட்டுதான் வளைகிறது. அவரின் பந்துவீச்சு ஐசிசி விதிமுறையை மீறி இல்லை அவர் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பந்துவீச அனுமதி அளிக்கிறோம்" என தெரிவித்தது.

நியூஸிலாந்துக்கு தற்போது இங்கிலாந்து அணி பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இடுப்பு வலிகாரணமாக, வில்லியம்ஸன் இந்த தொடரில் விளையாட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை இந்த சோதனையில் வில்லியம்ஸன் தேராமல் இருந்திருந்தால், சர்வதேச போட்டிகளில் வில்லியம்ஸன் பந்துவீச தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டு இருக்கும். அந்த தடையில் இருந்து வில்லியம்ஸன் தப்பியுள்ளார்.

பிடிஐ

SCROLL FOR NEXT