கடைசியாக நடைபெற்ற ஆஸ்தி ரேலிய தொடரில் சிறப்பாகவே பந்துவீசினேன். வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவில் விக்கெட் வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரான அஸ்வின், இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி களில் பெரிய அளவில் விக்கெட் வீழ்த்தியிருந்தாலும், வெளி நாடுகளில் நடைபெறும் போட்டி களில் பெரிய அளவில் ஜொலிக்க வில்லை என்ற விமர்சனம் தொடர்ச்சி யாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அது தொடர்பாக அஸ்வின் கூறியதாவது: கடைசியாக நடைபெற்ற ஆஸ்தி ரேலிய தொடரில் சிறப்பாக ஆடியிருப்பதாகவே நினைக் கிறேன். மற்றவர்களைவிட அதிக அளவில் விக்கெட் எடுக்கும் வாய்ப்பை உருவாக்கினேன். ஆஸ்திரே லிய பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தினேன்.
எனக்கு தெரிந்தவரையில் ஆஸ்திரேலியாவில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் ஒரே நாளில் 30 ஓவர்கள் வீசினால் அந்த பவுலரின் முயற்சி பாராட்டுக்குரியதாகும். கடந்த ஆண்டில் நான் அதுபோன்று பந்துவீசியிருக்கிறேன். 25 விக்கெட் எடுக்க வேண்டுமா அல்லது துல்லியமாக பந்துவீச வேண்டுமா என்று என்னிடம் கேட்டால், துல்லியமாக பந்துவீச வேண்டும் என்றுதான் சொல்வேன். ஏனெனில் சரியாக பந்துவீசிவிட்டால் விக்கெட் எடுத்துவிடலாம் என்றார்.
இந்திய துணைக் கண்டத்தில் இதுவரை 16 போட்டிகளில் ஆடியிருக்கும் அஸ்வின் அதில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஆனால் துணைக் கண்டத்துக்கு வெளியே 9 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் 24 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார்.
அது குறித்துப் பேசிய அஸ்வின், “இந்தியாவில் விளையாடினால் முதல் போட்டியிலேயே 5 விக்கெட் வீழ்த்திவிடலாம். ஆனால் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் விளையாடும் போது உடனடியாக 5 விக்கெட் வீழ்த்த முடியாது. 3-வது அல்லது 4-வது டெஸ்ட் போட்டியில்தான் 5 விக்கெட் வீழ்த்த முடியும்” என்றார்.
வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்க விரும்புவதாக தெரிவித்த அஸ்வின், “வெளிநாடுகளில் விளையாடும்போது ஒவ்வொ ருவரும் மிகச்சரியாக விளை யாடும்பட்சத்தில் சுழற்பந்து வீச்சாளரின் பணி எளிதாகிவிடும். அதேநேரத்தில் நானும் மிகுந்த பொறுப்புணர்வோடு ஆட வேண்டும். இதற்கு முன்னர் ஆடியதைவிட இனிமேல் சிறப்பாக ஆடுவதற்காக இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவுக்காக நிறைய போட்டிகளில் வெற்றித் தேடித்தந்தால் மிகுந்த மகிழ்ச்சி யடைவேன்” என்றார்.