விளையாட்டு

முன்னாள் உருகுவே கால்பந்து வீரர் கீஜா காலமானார்

ஏஎஃப்பி

முன்னாள் உருகுவே கால்பந்து வீரரும், புகழ் பெற்ற முன்கள ஆட்டக்காரருமான அல்சிடெஸ் கீஜா (88) நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக காலமானார். இந்தத் தகவலை அவருடைய மனைவி பியாட்ரிஸ் உறுதி செய்துள்ளார்.

1950-ல் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் பிரேசிலின் புகழ்பெற்ற மரக்காணா மைதானத்தில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த அந்த ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் அல்சிடெஸ் கீஜா கோலடிக்க, உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது.

அந்த உலகக் கோப்பையின் மூலம் புகழின் உச்சத்தைத் தொட்ட கீஜா, அந்தப் போட்டி நடந்த 65 ஆண்டுகளுக்குப் பிறகு காலஞ்சென்றிருக்கிறார். 1950 உலகக் கோப்பையை வென்ற உருகுவே அணியில் இடம்பெற்றிருந்தவர்களில் கடைசியாக உயிரிழந்தது கீஜாதான்.

உருகுவே அணிக்காக 1950 முதல் 1952 வரை விளையாடிய கீஜா, 12 ஆட்டங்களில் விளை யாடி 4 கோல்களை அடித்துள் ளார். 1957 முதல் 1959 வரை இத்தாலி அணிக்காக 5 ஆட்டங் களில் விளையாடிய கீஜா ஒரு கோல் அடித்துள்ளார்.

SCROLL FOR NEXT