விளையாட்டு

ஹேக்  செய்யப்பட்ட ஷேன் வாட்சன் ட்விட்டர் பக்கம்

செய்திப்பிரிவு

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது.

ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலங்களில் பக்கங்கள் ஹேக் செய்யப்படுவது வழக்கமாக நடைபெறும் செயலாக மாறி வருகிறது.

அந்த வகையில் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சனின் ட்விட்டர் பக்கம் வெள்ளிக்கிழமை ஹேக் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது ட்விட்டர் பக்கத்திலிருந்து அவரது புகைப்படம் நீக்கப்பட்டது. பிறகு ரசிகர்கள் பதிவுகள் பல ஷேன் வாட்சன் ட்விட்டர் பக்கத்தால் ரீட்வீட் செய்யப்பட்டது. இதனால் அவரது ரசிகர்கள் வாட்சனின் உங்கள் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதா? என்று கேள்வி எழும்பினர்.

இதனைத் தொடர்ந்து சில மணி நேரம் கழித்து வாட்சனின் ட்விட்டர் பக்கம் மீட்கப்பட்டது. ஆனால் இது குறித்த எந்த கருத்தையும் வாட்சன் தெரிவிக்கவில்லை.

ஓய்வு பெற்ற 38 வயதான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஐபிஎல் உள்ளிட்ட கிளப் போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறார்.

SCROLL FOR NEXT