நியூஸிலாந்து முன்னாள் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் தலைமைப் பயிற்சியாளராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பொறுப்பேற்றதையடுத்து பயிற்சிக்குழுவில் ஆலோசகராக முன்னாள் ஆஸி. அதிரடி வீரர் டேவிட் ஹஸ்ஸி சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே போல் பவுலிங் பயிற்சியாளராக கைல் மில்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
2008-2010-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 23 போட்டிகளில் ஆடியுள்ளார் டேவிட் ஹஸ்ஸி. மொத்தம் 267 டி20 போட்டிகளில் ஆடிய டேவிட் ஹஸ்ஸி, 6,097 ரன்களை எடுத்துள்ளார்.
அதே போல் நியூஸிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸ் கொல்கத்தா அணியின் பவுலிங் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2019 ஐபிஎல் தொடரில் 5ம் இடத்தில் முடிந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதனையடுத்து ஜாக் காலிஸ், சைமன் கேட்டிச்சுக்கு நிர்வாகம் விடை கொடுத்து அனுப்பியது.
ஐபிஎல் கிரிக்கெட் ஒரு பணமழை கிரிக்கெட் இதில் வெற்றி என்பது பணம் காய்ச்சி மரமாகும் எனவேதான் அனைத்து அணிகளும் வீரர்கள் அளவுக்கு பயிற்சியாளர்களுக்கும் செலவு செய்கின்றன.