புரோ கபடி லீக் போட்டியில் யு மும்பா அணி 28-21 என்ற புள்ளிகள் கணக்கில் புனேரி பல்டான் அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக 4-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பா அணியும், புனேரி பல்டான் அணி யும் மோதின. அசத்தலாக ஆடிய மும்பை அணிக்கு ஷபீர் பாபு, ரிஷாங்க் தேவாடிகா ஆகியோரின் தாக்குதல் ஆட்டமும், அற்புதமான தற்காப்பு ஆட்டமும் மிகப்பெரிய பலமாக அமைந்தது.
கடந்த 4 நாட்களில் 4 வெற்றிகளைப் பெற்ற மும்பா அணி 20 புள்ளி களுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.