அமெரிக்காவின் லெக்ஸிங்டன் நகரில் நடைபெற்று வரும் லெக்ஸிங்டன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியா வின் யூகி பாம்ப்ரி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
யூகி பாம்ப்ரி தனது முதல் சுற்றில் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் குரேஷியாவின் மதிஜா எகோட்டிக்கை தோற்கடித்தார்.
நேற்று முன்தினம் நடந்த இந்த ஆட்டம் மழை காரணமாக பாதியி லேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனால் ஆட்டத்தின் எஞ்சிய பகுதி நேற்று நடந்தது.
யூகி பாம்ப்ரி தனது 2-வது சுற்றில் பிரிட்டனின் பிரையன் கிளெய்னை சந்தக்கிறார். கிளெய்ன் தனது முதல் சுற்றில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதனை தோற் கடித்தார்.
தற்போதைய நிலையில் இந்தப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இருக்கும் ஒரே இந்தியர் யூகி பாம்ப்ரி என்பது குறிப்பிடத்தக்கது.