இந்திய பாட்மிண்டன் வீராங்க னைகள் ஜுவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் தேசிய பயிற்சியாளர் கோபிசந்த் தங்களை பாரபட்சத்துடன் நடத்துவதாகக் குற்றம்சாட்டியிருந்த நிலையில் அதை முற்றிலுமாக மறுத்துள்ளார் கோபிசந்த்.
ஜுவாலா, அஸ்வினிக்கு தேவை யான அனைத்து உதவிகளையும் இந்திய பாட்மிண்டன் சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்), மத்திய அரசு ஆகியவை வழங்கி வருவதாக கோபிசந்த் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற கனடா ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன் னப்பா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில் ஒலிம் பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப் புள்ள இந்திய வீரர்கள் பட்டிய லில் தங்கள் பெயர் இடம் பெறாததை சுட்டிக்காட்டி பேசிய ஜுவாலாவும், அஸ்வினியும், பயிற் சியாளர் கோபிசந்த் இந்தியாவில் உள்ள எல்லா வீரர், வீராங்கனை களையும் சமமாக நடத்த வேண்டும். இல்லையெனில் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
அவர்களுடைய குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ள கோபிசந்த், மேலும் கூறியிருப்பதாவது: அவர்கள் இருவரும் இதுபோன்று மிக அதிக மாக பேசி வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய பிரச்சினை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அடிப்படை எதுவும் இல்லாமல் என்மீது குற்றம்சாட்டுவதால் அவர் களுக்கு எந்த பலனும் கிடைக்காது. அவர்கள் இதுபோன்று பேசி வருவது துரதிர்ஷ்டவசமானது.
நாம் தேவையில்லாத விஷயங் களையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு நமது விளையாட்டு தரத்தை மேம்படுத்த வேண்டிய முக்கிய மான நேரம் இது என கருதுகிறேன். அவர்கள் விளையாடிய அனைத்து போட்டிகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய பாட்மிண்டன் சங்கம், மத்திய அரசு ஆகியவை செய்திருக்கிறது.
இந்தியாவில் இரண்டு விதமான பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்தோனேசியா வைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் பயிற்சியளித்து வருகிறார்கள். அதில் இரட்டையர் பிரிவு சிறப்பு பயிற்சியாளர்களும் இடம்பெற் றுள்ளனர். ஜுவாலா, அஸ்வினி ஆகியோர் கேட்ட அனைத்து உதவி களும் செய்து கொடுக்கப் பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளவர்கள் பட்டியல், அதற்கென தனியாக நியமிக்கப்பட்ட கமிட்டியால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் அது தொடர்பாக நான் எதுவும் சொல்ல முடியாது என்றார்.